28th of March 2014சென்னை::நடிகை நஸ்ரியா, தமிழில், நம்பர் 1 இடத்தை, விரைவில் எட்டிப்பிடித்து
விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், 'நையாண்டி படத்தின்
தொப்புள் சர்ச்சையில் சிக்கி, மார்க்கெட்டை சரித்துக் கொண்டார்.
திடீரென, மலையாள இயக்குனர் பாசிலின் மகன், பஹத் பாசிலுக்கும்,
நஸ்ரியாவுக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஆனாலும்,
நஸ்ரியா, தொடர்ந்து நடித்து வந்தார். 'திருமணத்திற்கு பின்னும்,
தொடர்ந்து நடிப்பேன்' என்று தெரிவித்தார். சமீபத்தில் நஸ்ரியாவை
சந்தித்த பஹத் பாசில், தொடர்ந்து சினிமாவில் நடிக்க, அவருக்கு தடை
போட்டு விட்டாராம். அதனால், இதுவரை, 'பஹத் வீட்டில், என் நடிப்புக்கு
யாரும் தடை போடவில்லை என கூறி, புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வந்த
நஸ்ரியா, திடீரென, புதிதாக ஒப்பந்தமான படங்களில் இருந்து
விலகியுள்ளார்...
Comments
Post a Comment