ஒரு மில்லியனை தாண்டியது மம்தாவின் ஃபேஸ்புக் ரசிகர்களின் எண்ணிக்கை!!!!

17th of March 2014
சென்னை::சிவப்பதிகாரம்’, ‘குரு நம்ம ஆளு’, ‘தடையற தாக்க’ உள்பட சில தமிழ்ப்படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ். இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது குடும்ப நண்பரான பிரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டு சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கினார். ஆனால், திருமணமான ஒரு வருடத்திற்குள்ளேயே அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ ஆரம்பித்தனர். அதனால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இடையில் விதியின் விளையாட்டால் கேன்சரின் தாக்குதலுக்கு ஆளானாலும் தனது தன்னம்பிக்கையால் அதிலிருந்து மீண்டு வந்தார் மம்தா. தனது அனுபவங்களையும் தான் நடித்துவரும் படங்கள் பற்றிய விபரங்களையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு வந்தார் மம்தா. இவருக்கு தற்போது ஃபேஸ்புக்கில் ரசிகர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியுள்ளது. இதற்காக தனது ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார் மம்தா மீண்டும் படங்களில் பிஸியாக நடித்துவரும் மம்தா தற்போது மலையாளத்தில் ‘ட்டூ நூர் வித் லவ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.  
 
 

 

Comments