11th of March 2014
சென்னை::ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு எஸ்.பி.பி. சரண் தனது கேபிடல் பிலிம் வொர்க்ஸ் சார்பில் தயாரிக்கும் படம் தான் ‘மூணே மூணு வார்த்தை’. அதென்ன மூணே மூணு வார்த்தை’..?. I love you’ மூணே மூணு வார்த்தைதான். அதேபோல I hate you, How are you இதெல்லாம் மூணே மூணு வார்த்தைதான். இப்படி தலைப்பையே வித்தியாசமாக வைத்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தை இயக்குகிறார் மதுமிதா. ‘வல்லமை தாராயோ’, ‘கொல கொலயா முந்திரிக்கா’ படங்களை தொடர்ந்து அவரது இயக்கத்தில் மூன்றாவது படம் இது.. காதல் கலந்த நகைச்சுவை படமான இதில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் அர்ஜுன் சிதம்பரம். ‘சுட்டகதை’ மற்றும் ‘இரண்டாம் உலகம்’ படங்களில் நடித்த வெங்கடேஷ் ஹரிநாதன் மற்றொரு நாயகனாக நடிக்கிறார். அதிதி செங்கப்பா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.
இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் எஸ்.பி.பி மற்றும் லட்சுமி இருவரும் நடிக்கிறார்கள். பிரபல ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத்தின் உதவியாளர் ஸ்ரீனிவாசன் வெங்கடேஷ் ஒளிப்பதிவாளராகவும், கார்த்திகேய மூர்த்தி என்பவர் இசையமைப்பாளராகவும் இந்தப்படத்தில் அறிமுகம் ஆகின்றனர். ‘ஆஹா கல்யணம்’ படத்தில் வசனம் மூலம் நம் கவனம் ஈர்த்த ராஜீவ் ராஜாராம் இந்தபடத்தில் ஜம்போ என்ற மற்றொரு வசன கர்தாவுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Comments
Post a Comment