இளையராஜாவின் மேஜிக்! கண்ணீர் விட்ட பிரகாஷ்ராஜ்!!!!

 
27th of March 2014
சென்னை::பாலா - இளையராஜா மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படத்திற்கு தாரை தப்பட்டை என்று பெயரிட்டிருக்கின்றனர். நடனக்கலைஞர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தில், வழக்கம்போல இளையராஜாவின் இசை மிக முக்கியமான பங்கினைக் கொண்டுள்ளது. 

இத்திரைப்படத்திற்காக 6 நாட்களில் 12 பாடல்களுக்கு இசையமைத்து இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தனர். இந்நிலையில் சமீபத்தில் பாலாவின் தாரை தப்பட்டை திரைப்படத்திற்காக இசையமைத்த பாடலை, தனது உன் சமையலறையில் திரைப்படத்திற்காக இளையராஜாவை சந்திக்கச் சென்ற பிரகாஷ் ராஜ் கேட்டிருக்கிறார்.
 
இளையராஜாவின் இசையில் தன்னை மறந்து இளையராஜாவை கட்டி அணைத்து அழுதேவிட்டாராம் மனுஷன். பாலாவின் வலி மிகுந்த படங்களில் இடம்பெறும் இளையராஜாவின் வலிமையான இசையைக் கேட்பவர் அழுவது காலம்காலமாக நடந்துவருவது தான்.. 

Comments