இளையராஜா ஃபேன்ஸ்கிளப் – கார்த்திக்ராஜாவுக்கு பதிலாக பவதாரிணி..!!!!

26th of March 2014
சென்னை::.இசைஞானி இளையராஜாவிற்கு உலகமுழுவதும் ரசிகர்கள், நலம் விரும்பிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் அமைப்பாக உருவாகியுள்ளதுதான் ‘இளையராஜா ஃபேன்ஸ் கிளப்’.

முதலில் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா தான் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார், அவருக்கு உள்ள வேலைப்பளு காரணமாக கார்த்திக்ராஜாவுக்கு பதில் பவதாரணி செயல்பட உள்ளார். இதற்கான அறிவிப்பை துவக்கவிழா நாளான ஏப்ரல்-5ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் அறிவிக்க உள்ளனர்.

கார்த்திக்ராஜா தலைமையில் “ராஜாவின் சங்கீதா திருநாள்” நிகழ்ச்சி நடைபெறும் 5ஆம் தேதியே “இசைஞானி” என்ற வார இதழும் துவங்கப்பட உள்ளது. இந்த துவக்க விழாவில் யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக்ராஜா, பவதாரணியுடன் மற்றும் இளையராஜாவும் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments