12th of March 2014
சென்னை::மயிலைடுறையில் படப்பிடிப்புக்காக வந்த நடிகை ப்ரியா ஆனந்த் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கித் திணறினார்.
விமல், சூரி, பிரியா ஆனந்த் மூவரும் நடித்துவரும் படம் ஒரு ஊர்ல ரெண்டு
ராஜா.இதன் படப்பிடிப்பு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த
படப்பிடிப்பில் விமல், பிரியா ஆனந்த் மற்றும் சூரி பங்கேற்ற பாடல்காட்சி
படம் பிடிக்கப்பட்டது. படப்பிடிப்பை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
இதனால் படப்பிடிப்பைத் தொடர முடியாத அளவுக்கு ரசிகர்கள் கூச்சல்
எழுப்பியபடி இருந்தனர். ப்ரியா ஆனந்த், சூரி ஆகியோரை கிண்டல் செய்தபடி
இருந்தனர்.அப்போது ரசிகர்கள் ப்ரியா ஆனந்தை மறித்து ஆட்டோ கிராப் கேட்டனர்.
சிலர் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக்கொள்ள முயன்றனர். அப்போது சில
ரசிகர்கள் பிரியா ஆனந்தின் கையை பிடித்து இழுத்து ரகளை செய்தனர். மிகவும்
சிரமத்துக்கிடையே பிரியாமணியை பாதுகாவலர்கள் மீட்டு கேரவனுக்குள் அனுப்பி
வைத்தனர். இது குறித்து பிரியாமணி கூறியபோது, மறக்க முடியாக பயங்கர அனுபவம்
இது என்றார்...
Comments
Post a Comment