ஹீரோவின் நெஞ்சில் ஹீரோயின் உதைக்க, தடைப்பட்ட ஷூட்டிங்!!!

10th of March 2014
சென்னை::மார்ச் 14-ல் வெளிவரும் ‘மறுமுகம்’ படத்தினை எண்டெர்டைன்மெண்ட் அன்லிமிட்டெட் சார்பில் சஞ்சய் தயாரிக்க, கமல் சுப்பிரமணியம் இயக்கியுள்ளார்.
 
படத்தில் வரும் ‘நீயில்லாத’ என்ற பாடல் காட்சியை ஒரு அருவியில் வைத்துப் படமாக்கும்போது படத்தின் நாயகி ஷில்பி, நாயகன் கிஷியை எட்டி உதைப்பது போல் செய்யவேண்டும். இதில் நிஜமாகவே ஷில்பி, கிஷியை எட்டி நெஞ்சில் உதைத்துவிட கிஷி டென்ஷனாகி விட்டாராம்.
 
யாரிடமும் உதை வாங்காத தன்னை இந்தப் பெண் நெஞ்சில் உதைத்து விட்டதே என கோபத்தில் ஒரு ஓரமாகச் சென்று அமர்ந்துகொண்டாராம். இதனால் ஷூட்டிங் தடைபட்டிருக்கிறது. பின்னர் இயக்குநர் தலையீட்டில், ஷில்பி சென்று தனது வருத்தத்தை கிஷியிடம் தெரிவித்து சாமாதானம் செய்திருக்கிறார்.
 
முதல் படமென்பதால் ஷாட்டில் கொஞ்சம் அதிகப்படியான வேகம் வந்துவிட்டது. தவறு என்மீதுதான். நான் கவனமாக இருந்திருக்க வேண்டும்..” என்று ஷில்பி மன்னிப்பு கேட்க, பிரச்சனை முடிவுக்கு வந்து ஷூட்டிங் தொடர்ந்து முடிந்திருக்கிறது.
படத்தைப் பார்த்தால் ஷில்பியின் உதையை கிஷி ஆவலோடு வாங்கிக் கொள்வது போல அல்லவா தெரிகிறது..!?...

Comments