விஜய் முகத்தில் குத்து விட்ட வில்லன்: முருகதாஸ் அதிர்ச்சி!!!

2nd of March 2014
சென்னை::ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு ஆந்திராவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜெயிலை உடைத்துக்கொண்டு வில்லன் டோட்டா வெளியே வருவது போன்ற ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
 
ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ராஜமுந்திரி சிறை போன்று செட் அமைத்து விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் கதைப்படி ஜெயிலில் இருந்து தப்பித்து செல்லும் அன்னிய நாட்டு உளவாளியை விஜய் எப்படி பிடிக்கிறார் என்பதை பல திடுக்கிடும் திருப்பங்களோடு முருகதாஸ் இயக்கி வருகிறார்.
 
நேற்றைய படப்பிடிப்பில் ஜெயிலில் இருந்து வில்லன் நடிகர் டோட்டா தப்பிக்கும் காட்சிக்கும் படமாக்கப்பட்டன.அதன்பின்னர் விஜய் மற்றும் டோட்டா ஆக்ரோஷமாக மோதும் சண்டைக்காட்சிகளும் படமாக்கபட்டது. இந்த சண்டைக்காட்சியில் நடிக்கும்போது டோட்டா ஒரு ஷாட்டில் விஜய்யின் கன்னத்தில் நிஜமாகவே குத்திவிட்டார். இதனால் விஜய் உதட்டோரத்தில் ரத்தம் வந்ததாக கூறப்படுகிறது.
 
இதனால் முருகதாஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். விஜய் முகத்தில் லேசாக பஞ்ச் வைப்பது போல் நடிப்பதற்கு தனது கை தவறி நிஜமாக குத்திவிட்டதாக கூறி விஜய்யிடம் வில்லன் நடிகர் மன்னிப்பு கேட்டதை அடுத்து பரபரப்பு அடங்கியது. விஜய்யின் காயத்திற்கு முதலுதவி செய்தபின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments