25th of March 2014
சென்னை::.இசை அமைப்பாளர், இயக்குனருடன் ஜாலியாக ஊர் சுற்றி பொழுதை கழித்தார் சார்மி. கோலிவுட்டிலிருந்து டோலிவுட்டுக்கு சென்ற சார்மி டாப் ஹீரோயின்களுடன் போட்டியிட்டு தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். சமந்தா, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா போன்ற இளம் ஹீரோயின்களின் வருகையால் இவர் மார்க்கெட் டல்லடித்தது. இந்நிலையில் பாலிவுட் படங்களுக்கு குறி வைத்து சென்றார். ஒரு படம் மட்டுமே நடித்தவருக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் மீண்டும் டோலிவுட்டுக்கு திரும்பி வந்தார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளில் நடிக்கப்போகிறேன் என்று பரபரப்பாக பேட்டி கொடுத்தார்.
அதற்கு ஏற்றார்போல் பெண்கள் பிரச்னையை மையமாக கொண்டு உருவாகும் பிரதி கடனா என்ற படத்தில் பத்திரிகை நிருபர் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எத்தனையோ கேரக்டரில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்த கேரக்டருக்கு எப்படி வரவேற்பு இருக்கப்போகிறதோ என்று டென்ஷனாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இதற்கிடையில் கோடையின் வெப்பத்தை தணிக்க அவ்வப்போது நீச்சல் பயிற்சி, குளுகுளு இடங்களுக்கு பிக்னிக் என சென்று ஓய்வு எடுக்கிறார்.
சமீபத்தில் டோலிவுட் ஹீரோ பிரபாஸ், இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இயக்குனர் புரி ஜெகநாத்துடன் ஊர் சுற்றி ஜாலியாக பொழுதை கழித்தார். அவர்களுடன் தோள் மீது கைபோட்டு குபீர் சிரிப்புடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த படம் இணைய தளங்களில் பளிச்சிடுகிறது. தேவிஸ்ரீ பிரசாத்தை சார்மி காதலிப்பதாக ஏற்கனவே தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment