கணேஷ் வெங்கட்ராமை விடாது துரத்தும் போலீஸ்!!!



17th of March 2014சென்னை::உன்னைப்போல் ஒருவன்’, ‘இவன் வேற மாதிரி’ படங்களில் போலீஸ் அதிகாரியாக மிரட்டியவர் கணேஷ் வெங்கட்ராம். இப்போது தான் இயக்கிவரும் ‘பள்ளிக்கூடம் போகாமலே’ என்ற படத்திலும் அவருக்கு காக்கி யூனிஃபார்மை கொடுத்து அசிஸ்டென்ட் கமிஷ்னர் ஆக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெயசீலன். இன்னொரு சிறப்பம்சமாக இந்தப்படத்தில் ‘மாவீரன் ஷேர்கான்’ ஸ்ரீஹரி மனோதத்துவ டாக்டராக நடித்திருக்கிறார். அவர் இறப்பதற்கு முன்பு முழுமையாக நடித்துக்கொடுத்த படம் இது.
 
இளம் கதாநாயகனாக தேஜாஸ் என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்த வில்லன் அலெக்ஸின் மகன் தேஜாஸ் என்பவர் இளம் கதாநாயகனாகவும், கதாநாயகியாக ஐஸ்வர்யாராஜாவும் அறிமுகமாகிறார்கள். இதுதவிர வில்லனாக புலவர் புலமைபித்தன் பேரன் திலீபன் அறிமுகமாகிறார். ஒளிப்பதிவை யு.கே.செந்தில்குமார் கவனிக்க, இசையமைக்கிறார் சாம்சன் கோட்டூர்
 
படத்தின் கதைபற்றி இயக்குனர் என்ன சொல்கிறார்..? “கல்விதான் இந்தப்படத்தின் கரு. ஆசிரியர் போடும் மார்க் மட்டுமே கல்விக்கான தகுதி கிடையாது… மார்க் மட்டுமே வாழ்கையை தீர்மானித்து விடுவதில்லை. கல்வி உயிரை விட பெரிதல்ல.. தோல்வி என்பது மனிதனின் வாழ்க்கைப் பாடமே தவிர அதுவே வாழ்கையின் முடிவு கிடையாது என்கிற கருத்தை உள்ளடக்கிய கதை இது.
 
தேர்வு தோல்வி பயத்தில் தற்கொலை செய்ய நினைப்பவர்கள் மனநிலையை இந்தப்படம் போக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு” என்றார் ஜெயசீலன்..    
 

Comments