13th of March 2014
சென்னை::மெரினா, எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என பல ஹிட் படங்களில் நடித்து விட்டதால் இப்போது சிவகார்த்திகேயனுக்கென்றும் ஒரு வியாபார வட்டம் உருவாகி விட்டது. அதனால் தற்போது நடித்துள்ள மான்கராத்தே படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், இப்படத்தில் முன்னணி நடிகை ஹன்சிகாவுடன் டூயட் பாடியுள்ள சிவகார்த்திகேயனுக்கு, ரஜினி, அஜித், விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு கொடுப்பது போன்று ஒரு ஓப்பனிங் பாடலும் வைத்திருக்கிறார்களாம். ராயபுரம் பீட்டரு என்ற தொடங்கும் அப்பாடலை பரவை முனியம்மாவுடன் இணைந்து பின்னணி பாடியுள்ள சிவகார்த்திகேயன், பாடலிலும் அவருடனேயே இணைந்து நடனமாடியிருக்கிறார். ஆக, ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இமானின் இசையில் ஊரக்காக்க உண்டான சங்கம் என்ற பாடலை பாடிய அவர், இப்போது அனிருத் இசையில் மீண்டும் இப்பாடலை பாடியிருக்கிறார்.
தற்போது இப்பாடலை ராயபுரம், காசிமேடு ஏரியாக்களில் பாடமாக்கிக்கெண்டிருக்கிறார்கள். கொளுத்தும் வெயிளுக்கேற்ப சிவகார்த்திகேயனும் அதிரடி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார். ஓப்பனிங் பாடல் என்பதால், இப்பாடலைக்கேட்டு ரசிகர்களும் எழுந்து ஆடும் வகையில் ஆர்ப்பாட்டமான இசையை கொடுத்திருக்கிறார் கொலவெறி அனிருத்.

Comments
Post a Comment