21st of March 2014
சென்னை::சமீபத்தில் வெளியான நிமிர்ந்து நில் படத்தில் இரண்டு வேடங்களில்
ஜெயம்ரவி நடித்திருந்தார். அதையடுத்து இப்போது ஏ.ஆர்.முருகதாஸ்
இயக்கத்தில் விஜய்யும் இரண்டு வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே அழகிய தமிழ் மகன் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தபோதும் பெரிய
வித்தியாசத்தைக் காட்டாத விஜய், இந்த படத்தில் நடிப்பு மட்டுமின்றி
பாடிலாங்குவேஜிலும் நிறைய வித்தியாசத்தை வெளிப்படுத்தி
நடிக்கப்போகிறாராம்.
அவரைத் தொடர்ந்து பேரழகன்
படத்தில் இரண்டு வேடங்களில் நடித்த சூர்யா, அதையடுத்து கே.வி.ஆனந்தின்
மாற்றான் படத்தில் இரட்டை பிறவியாக நடித்தவர், தற்போது லிங்குசாமி
இயக்கத்தில் நடிக்கும் அஞ்சான் படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
இதுவரை மும்பை தாதா கூட்டத்தைச்சேர்ந்த இளைஞனாக சூர்யா நடிக்கிறார் என்பதை
மட்டும் கூறி வந்த லிங்குசாமி இப்போது அவர் இரண்டு பேடங்களில்
நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதோடு. இதுவரை
பார்க்காத ஸ்டைலிஷான சூர்யாவை இந்த படத்தில் பார்க்கலாம். அதற்காக நிறைய
கால அவகாசம் எடுத்துக்கொண்டு தன்னை மாற்றியுள்ள சூர்யா, நடிப்பிலும்
வித்தியாசத்தை பிரதிபலித்து வருவதாக சொல்லும் லிங்குசாமி, நடிபபுக்காக
தன்னை முழுசாக சூர்யா அர்ப்பணித்திருப்பதாகவும் கூறுகிறார்.
Comments
Post a Comment