26th of March 2014
சென்னை::நடிப்பில் அகோர பசி கொண்டவர் என்று சொல்வார்களே அது நடிகர் பிரகாஷ்ராஜுக்கு நன்றாகவே பொருந்தும். ஒரு சாதாராண, சின்ன பட்ஜெட் படத்தில் இவர் நடிக்கிறார் என்றால் அந்தப்படத்தின் வியாபாரமே வேறு கலருக்கு மாறிவிடும்.
நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம் என அனைத்திலும் இறங்கி வெற்றியோ, தோல்வியோ அதன் அடி ஆழம் வரை சென்று பார்க்கும் தைரியமும் பிரகாஷ்ராஜின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி.. அந்த தைரியம் தான் தற்போது அவரை சீரியஸாக மும்மொழிகளில் ஒரே நேரத்தில் ‘சால்ட் அண்ட் பெப்பர்’ என்கிற மலையாள படத்தை டைரக்ட் பண்ண வைத்துக்கொண்டிருக்கிறது.
தமிழில் ‘உன் சமையல் அறையில்’, தெலுங்கில் ‘உலவச்சாறு பிரியாணி’, கன்னடத்தில் ‘ஒகரானே’என ஒரே படத்தை மூன்று மொழிகளில் இயக்குவது என்றால் சும்மாவா.? ஆனால் பிரகாஷ்ராஜ் அதையும் வெற்றிகரமாக செய்து முடிப்பார் என்பதில் சந்தேகமே வேண்டாம்..
இன்று பிறந்தநாள் காணும் பிரகாஷ்ராஜுக்கு poonththalir-kollywood.தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.::.
Comments
Post a Comment