20th of March 2014
சென்னை::சிலம்பாட்டம்’ சரவணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக ‘சிப்பாய்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் லட்சுமி மேனன். இந்தப்படத்தில் சமூக விழிப்புணர்வு செயல்களில் துணிச்சலாக ஈடுபடும் கல்லூரி மாணவி வேடம் லட்சுமி மேனனுக்கு. ஊர் ஊராக சென்று வீதிகளில் தெருக்கூத்து மற்றும் மேடை நாடகங்களை அரங்கேற்றி அதன் மூலம் சமூகத்திற்கு தீங்கு செய்யும் விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.
குறிப்பாக தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் தண்ணீரில் கலப்பதால் அதை பயன்படுத்தும் மனிதர்கள் என்னவிதமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தெருக்கூத்தாக நடித்திருக்கிறார் லட்சுமி மேனன். இன்னும் சொல்லப்போனால் லட்சுமி மேனனின் அறிமுக காட்சியே மதுவுக்கும் புகைபிடித்தலுக்கும் எதிரான மேடை நாடக காட்சியாகத்தான் அமைந்திருக்கிறதாம்.
ஹேட்ஸ் ஆஃப் ட்டூ லட்சுமி மேனன்..!
Comments
Post a Comment