2nd of March 2014
சென்னை::2011ல் மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான ‘ட்ராஃபிக்’ படத்தை தற்போது இந்தியிலும் ரீமேக் செய்து இயக்குகிறார் அதை மலையாளத்தில் இயக்கியவரான ராஜேஸ் பிள்ளை. இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் இந்தியில் காலடி எடுத்துவைத்திருக்கிறார் நிகிதா. யெஸ்.. ‘சரோஜா’, ‘அலெக்ஸ்பாண்டியன்’ படங்களில் நடித்த அதே நிகிதா தான்.
மலையாளத்தில் சந்தியா நடித்திருந்த ரோலில் தான் தற்போது நடித்திருக்கிறார் நிகிதா. படத்தின் வசனப்பகுதிகள் முடிவடைந்து அடுத்துவரும் நாட்களில் டப்பிங் பேச இருக்கிறார் நிகிதா. இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இந்தப்படத்தில் நிகிதா மேக்கப் இல்லாமல் நடிக்கிறார்.
காரணம் இயற்கையான அழகே போதுமென்று சொல்லிவிட்டாராம் இயக்குனர் ராஜேஸ் பிள்ளை. படத்தில் கொஞ்ச நேரமே வந்துபோகும் கதாபாத்திரம் என்றாலும் தன்னுடைய கதாபாத்திரம் பேசப்படும் விதமாக இருக்கும் என்கிற நிகிதா தற்போது இரண்டு கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

Comments
Post a Comment