8th of March 2014சென்னை::ராம்சரணும் காஜல் அகர்வாலும் ராஜமௌலி டைரக்ஷனில் வெளியான ‘மகதீரா’ படத்தில் இணைந்து நடித்ததும் படம் சூப்பர் டூப்பர்ஹிட் ஆனதால் ராசியான ஜோடி என பெயர் எடுத்ததும் அதன்பின் ‘நாயக்’ என்ற படத்தில் மீண்டும் ஜோடியாக நடித்ததும் பழைய கதை.
இப்போது தெலுங்கில் மீண்டும் மூன்றாவது முறையாக இந்த ஜோடி ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகிறது. இந்தப்படத்தை பிரபல இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்குகிறார். கடந்த ஜனவரி-18ஆம் தேதி முதல் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கடந்த ஒரு மாத காலமாக இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது இங்கே ராமேஸ்வரத்திலும் கன்னியாகுமரியிலும் தான். இப்போது அங்கிருந்து கிளம்பி பொள்ளாச்சியில் டேரா அடித்திருக்கிறது படக்குழு.
மார்ச்-26ஆம் தேதி வரை இங்கே படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இங்கே பாடல் காட்சி உட்பட சில காட்சிகளை எடுக்க இருக்கிறார்களாம். இந்தப்படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்க கமாலினி முகர்ஜி இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார். ....
Comments
Post a Comment