30th of March 2014சென்னை:பார்த்திபன் இயக்கும் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் அமலா பால் வேட்டி சட்டை அணிந்து ஒரு காட்சியில் நடித்துள்ளார்.
கதை திரைக்கதை வசனம் இயக்கம் சினிமா சம்பந்தப்பட்ட கதை. விஜய் சேதுபதி,
நஸ்ரியா, பிரகாஷ்ராஜ், ஆர்யா, அமலா பால் ஆகியோர்
கௌரவ வேடத்தில் தோன்றுகிறார்கள். இதில் ஆர்யா, அமலா பால் திருமணம் செய்யும் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.
கதைப்படி அமலா பால் கொஞ்சம் எக்சென்ட்ரிக் கேரக்டர். திடீரென்று கோபம்
வரும், திடீரென்று அழுவார், திடீரென்று நல்ல மூடுக்கு திரும்புவார். அவரவது
கணவராக வரும் ஆர்யா சிறப்பு சக்திகள் உள்ளவராக நடிக்கிறார்.
புதுமுகங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் பார்த்திபன் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....
Comments
Post a Comment