24th of March 2014
சென்னை::தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அசின் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாறியபின்னர் தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது மற்ற நடிகைகளின் போட்டி காரணமாக அசினுக்கு இந்தி பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின.
வசூலை வாரிக்குவித்த படங்களில் நடித்தாலும் கூட, அசினுக்கு, பாலிவுட்டில் பெரிய வரவேற்பு ஒன்றும் கிடைக்கவில்லை. பிசியான முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பெறமுடியலையே என்கிற கவலையில் இருந்தார் அசின்.
அந்தக்கவலையை தீர்க்கும் விதமாக அபிஷேக் பச்சனுடன் ‘ஆல் இஸ் வெல்’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து தற்போது அக்ஷய்குமாருடன் ‘ஷாகீன்’ என்ற படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால் டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார் அசின்.
இந்தப்பட்த்தில் முதலில் நடிக்க பேசப்பட்டவர் நர்கீஸ் ஃபக்ரி தான்.. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நர்கீஸ் ஒதுங்கிக்கொள்ள இப்போது அந்த வாய்ப்பு அசினுக்கு கிடைத்துள்ளது. ‘ஹவுஸ்ஃபுல்-2’, ‘கில்லாடி 786’ படங்களை தொடர்ந்து அக்ஷய்குமாருடன் மூன்றாவது முறையாக ஜோடி சேருகிறார் அசின்.

Comments
Post a Comment