கோச்சடையான் பாடல்கள் ரிலீஸில் கலந்துகொண்ட ரஜினி பிரஸ் மீட்டில் பங்கேற்கவில்லை!!!

11th of March 2014
சென்னை::கோச்சடையான் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி பிற்பகல் 12.30 மணிக்கு முடிவடைந்தது.

இதில் இந்தி நடிகர்கள் ஷாரூக்கான், ஜாக்கி, ஷெராப், படத்தின் நாயகி தீபிகா படுகோனே, இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமன், ஷங்கர், தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம்.சரவணன், முரளி மனோகர், நடிகர்கள் சரத்குமார், ஆதி, நாசர், நடிகை சோபனா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியை ஜெயா தொலைக்காட்சி பிரத்யேகமாக ஒளிப்பதிவு செய்தது. இதனால், மற்ற தொலைக்காட்சி வீடியோ கிராபர்களுக்கும், பத்திரிகை மற்றும் இணையதள புகைப்படக்காரர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், இசை வெளியீட்டு முடிந்த பிறகு ஓட்டல் ஒன்றில் 'கோச்சடையான்' பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ரஜினிகாந்த் வருவார் என்று, நிருபர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், ரஜினிகாந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. படத்தின் நாயகி தீபிகா படுகோனே மேலும் படத்தில் நடித்த சரத்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட யாருமே இதில் கலந்துகொள்ளவில்லை.

இயக்குநர் செளந்தர்யா, தயாரிப்பாளர் முரளி மனோகர், நடிகர் ஆதி, உடைகள் வடிமைப்பாளர் ஆகிய நான்கு பேர் மட்டுமே பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்கள்.....

Comments