18th of March 2014
சென்னை::ஆர்யாவும், விஷாலும் சமகாலத்து நடிகர்கள். ஆனபோதும் நீயா நானா என்ற
போட்டி அவர்களுக்கிடையே இருந்ததில்லை. இருவருமே ஆரம்பத்தில் இருந்தே நல்ல
நண்பர்களாகவே பழகி வருகின்றனர். குறிப்பாக, தன்னிடம் யாராவது நல்ல கதை
சொன்னால் அதை விஷால் பக்கம் ஆர்யா திருப்பி விடுவார். அதேபோல் விஷாலும்
ஆர்யாவுக்கு பொருத்தமான கதைகளை யாராவது தன்னிடம் சொன்னால் அதில் அவரை
நடிக்குமாறு கேட்டுக்கொள்வார்.
மேலும், அவர்கள் இருவரும் நடித்த படங்கள் ஒரே நேரத்தில் மோதிக்கொண்டதில்லை. ஆனால் தற்போது விஷால் தமிழில் நடித்த பட்டத்து யானை, தீருடு என்ற பெயரிலும், ஆர்யா நடித்த ராஜா ராணி அதே பெயரிலும் தெலுங்குக்கு டப் செய்யப்பட்டு ரிலீசாகியுள்ளன. இரண்டு படங்களுமே ஓரளவு வசூலித்து வருவதால் ஆர்யா-விஷால் இருவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து, என்னதான் திரைக்குப்பின்னால் நண்பர்களாக இருந்தாலும், திரையில் போட்டியாளர்களாக தங்களை காட்டிக்கொண்டு வரும், விஜய்-அஜீத், சிம்பு-தனுஷ் போன்று இனி ஆர்யா-விஷால் இருவரும் போட்டியாளர்களாக செயல்படப் போகிறார்களாம். தொழிலில் போட்டிதான் தங்களுக்குள் ஒருவித உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறதாம்.

Comments
Post a Comment