30th of March 2014
சென்னை::காமெடி நடிகர் வடிவேலு ஹீரோவாக நடிக்க, கல்பாத்தி எஸ். அகோரம்
தயாரிப்பில், யுவராஜ் இயக்கத்தில், வளர்ந்து வரும் நகைச்சுவைப்படம் -
தெனாலிராமன்.
ஜகஜ்ஜால புஜ பல தெனாலிராமன் என்ற பெயரில் கடந்த
வருடம் தொடங்கப்பட்ட இப்படத்தின் பெயரில் கடந்த வாரம் மாற்றம்
செய்யப்பட்டது. அதன்படி, ஜகஜ்ஜால புஜ பல என்ற வார்த்தைகளை நீக்கிவிட்டு
தெனாலிராமன் என்ற பெயரை சூட்டி உள்ளனர். ஏப்ரல் முதல் தேதி அன்று
இப்படத்தின் இசைவெளியீட்டுவிழா நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 11 ஆம்தேதி படம்
வெளியாகவிருப்பதாக சொல்லப்பட்டது.
பட
வெளியீட்டுக்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தன.
இந்நிலையில் தெனாலிராமன் படத்தை சென்னையில் உள்ள ஃபோர்ஃப்ரேம் தியேட்டரில்
நேற்று தணிக்கைக் குழுவினர் பார்த்தனர். தெனாலிராமன் படத்தைப் பார்த்த
தணிக்குழுவினர் அனைத்து தரப்பினரும் பார்க்கத்தக்க படம் என யு சான்றிதழ்
வழங்கி இருக்கின்றனர்.
ஏப்ரல் 11 அன்று
தெனாலிராமனை வெளியிடத் திட்டமிட்டிருந்த தயாரிப்பாளர் தற்போது ஒரு வாரம்
தள்ளி அதாவது ஏப்ரல் 18 அன்றுவெளியிட உள்ளனர். ஏப்ரல் 11 அன்று விஷால்
நடிக்கும் நான் சிகப்பு மனிதன் படம் வெளிவருவதால், தெனாலிராமன் படத்துக்கு
ஓப்பனிங் இல்லாமல் போய்விடும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டிருக்கிறது.
Comments
Post a Comment