17th of March 2014
சென்னை::பரபரப்புக்கு பெயர்போனவர் பாலிவுட் (முன்னாள்) நடிகை ஷில்பா ஷெட்டி… மேக்கரீனா பாட்டில் இஜய்யுடன் ஆட்டம் போட்டாரே அவர்தான். ஒரு பக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராக இருந்தபடி கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்தி வந்தாலும் இன்னொருபுறம் சமூக நல மேம்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் ஒரு சமூக ஆர்வலராகவும் வலம் வருகிறார் ஷில்பா.
குறிப்பாக பாலியல் கொடுமைகளுக்கு எதிராக ஷில்பா ஷெட்டியும், முழக்கமிட்டு வருகிறார். இளம்பெண்கள் வெளியே செல்லும்போது தங்களது தற்காப்பிற்காக கத்தியை எடுத்துச்செல்லவேண்டும் என்று கூறியது கூட இதன் வெளிப்பாடுதான்.
இந்நிலையில் தற்போது மும்பை தொலைக்காட்சி ஒன்றில் மக்களுக்கு நல்லது செய்வதன் மூலம் சமூகத்தில் உலாவரும் நிஜ ஹீரோக்களை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டும் விதமாக ‘சோனி கா தில்’ என்ற நிகழ்ச்சியை தனது கணவருடன் இணைந்து தயாரிக்கிறார் ஷில்பா. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவரும் அவரே தான்..
இது ஏற்கனவே அமீர்கான் நடத்திவந்த ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியின் இன்னொரு வடிவம் தான் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இது வேறுமாதிரியான நிகழ்ச்சி என்கிறது ஷில்பா தரப்பு. எதுவாக இருந்தால் என்ன..? மக்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சி என்பதால் தாராளமாக இதை வரவேற்போம்..
Comments
Post a Comment