ஆர்யா-அமலாபால் மீண்டும் ரொமான்ஸ்!!!

7th of March 2014..
சென்னை::
வேட்டை’ படத்தில் இணைந்து நடித்த ஆர்யாவும் அமலா பாலும் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். அதுவும் பார்த்திபன இயக்கும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில்தான். ஆனால் நீங்கள் நினைப்பது போல முழுநீள கதாபாத்திரங்களாக அல்ல. சிறப்புத்தோற்றத்தில்தான். அதுவும் படத்தில் ஒரு குட்டி எபிஸோடாக இவர்கள் சம்பந்தமான ஒரு காதல்கதையும் உண்டு.
 
இதுதவிர பிரகாஷ்ராஜும், நஸ்ரியாவும் கூட சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்களாம். இந்தப்படத்தில் விஜய்சேதுபதியும் ஒரு முக்கியமான கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்றும் நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
 
சினிமா சம்பந்தப்பட்ட கதை என்பதால் பிரபல நடிகர்கள் சிலர் அவர்கள் பெயரிலேயே கெஸ்ட் ரோலில் நடிப்பது வழக்கமான ஒன்றுதானே.. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப்படத்தில் பார்த்திபன் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது மகள் கீர்த்தனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்...

Comments