21st of March 2014
சென்னை::..நித்யா மேனனிடம் கதை சொல்லப் போகும் எல்லா இயக்குனர்களுக்கும் பெருத்த அசவுகர்யம் நிலவுகிறது. அவருக்கென்று சில சட்டதிட்டங்கள் வைத்திருக்கிறாராம்.
படத்தில் இது இருக்கக் கூடாது. அது இருக்கக் கூடாது. நான் அப்படி இப்படி நடிக்க மாட்டேன் என்பவைதான் அது.
நித்யா மேனன் நடித்த படம் என்பதற்காகவே விநியோகஸ்தர்கள் விழுந்தடித்துக் கொண்டு வாங்கியது தெலுங்கிலும் மலையாளத்திலும்தான். தமிழில் அல்ல என்பதை சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த 'மாலினி 22 பாளையங்கோட்டை' படம் நிரூபித்தது. அ
தற்கப்புறம் இவர் நடித்த 'ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தை வாங்கவே ஆளில்லை. இந்த நிலையில் 'இந்த பொண்ணு எதுக்கு இந்த அலட்டு அலட்டுது?' என்று முணுமுணுக்கும் தமிழ்ப்பட இயக்குனர்கள், கேரளா வரைக்கும் ஹீரோயின் தேடி போனாலும், நித்யா வீட்டுப்பக்கம் போவதேயில்லை.
Comments
Post a Comment