21st of March 2014
சென்னை::எலெக்ஷன் வந்து விட்டாலே சினிமா ஆட்களுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விடுகிறது. அப்படித்தான் போன சட்டமன்றத் தேர்தலில் வடிவேலுவை அரசியலில் இறக்கி விட்டு அவரது சினிமா வாழ்க்கைக்கே கேட் போட்டார்கள்.
இதனால் கடந்த மூன்று வருடங்களாக ‘போனில் கூட யாரும் என்னிடம் பேசுவதில்லை’ என்று வடிவேலு விசும்பும் அளவுக்கு தமிழ்சினிமா அவரை ஓரங்கட்டி விட்டது.
இப்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வடிவேலு இடத்தில் இருக்கும் சந்தானத்தை வைத்து ஒரு முழு நீள காமெடிப்படம் எடுக்க ஆசைப்பட்டாராம் உதயநிதி ஸ்டாலின்.
முதலில் அவசரப்பட்டு ஓ.கே சொன்ன சந்தானம் பிறகு எங்கே தேர்தல் நேரத்தில் ஒரு கட்சிக்கு ஆதரவாக இதை பெரிய பிரச்சனையாக்கி விடுவார்களோ?\ என்று பயந்து பின் வாங்கி விட்டார். முதலில் என்ன ஜி உங்ககிட்ட எல்லாம் பேமண்ட் பேச முடியுமா? குடுக்குறதைக் குடுங்க என்று பேசிய சந்தானம் இப்போது இந்த தொகையை கொடுங்க என்று கழற்றி விடும் நோக்கத்தில் ஒரு பெரிய தொகையை கேட்கிறாராம்.
இதனால் சந்தானத்தை வைத்து படம் பண்ணும் யோசனை பின்னுக்குத்தள்ளி விட்டாராம் உதயநிதி. தப்பிச்சோம்டா சாமி என்று நிம்மதியாக இருக்கிறார் சந்தானம்.
Comments
Post a Comment