21st of March 2014
சென்னை::.சிலம்பாட்டம்’ படத்தை தொடர்ந்து சரவணன் இயக்கும் படம் சிப்பாய்.
இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக
நடித்து வருகிறார் லட்சுமி மேனன். எஸ்.எஸ்.கிரியேஷன்ஸ் என்னும் பேனரில்
ஸ்ரீநாத் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை
அமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில்
லட்சுமி மேனன் சமூக விழிப்புணர்வு செயல்களில் ஈடுபடும் துணிச்சல் மிக்க
கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
இதன் மூலம் ஊர் ஊராக சென்று வீதிகளில் தெருக்கூத்து மற்றும் மேடை
நாடகங்களை அரங்கேற்றி சமூகத்திற்கு தீங்கு செய்யும் விஷயங்களை வெளிச்சம்
போட்டு காட்டுவாராம். அதிலும் குறிப்பாக தொழிற்சாலையில் இருந்து வெளியேறும்
கழிவுகள், தண்ணீரில் கலப்பதால் அதை பயன்படுத்தும் மனிதர்கள் என்னவிதமாக
பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தெருக்கூத்தாக நடித்திருக்கிறார் லட்சுமி
மேனன்.
இவற்றிற்கு மேலாக லட்சுமி மேனனின் அறிமுக காட்சியே மதுவுக்கும்
புகைபிடித்தலுக்கும் எதிரான மேடை நாடக காட்சியாகத்தான் அமைந்திருக்கிறதாம்.
Comments
Post a Comment