22nd of March 2014
சென்னை::புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மறைந்து கிட்டத்தட்ட 26 வருடங்கள் கழிந்தாலும் கூட அரசியலில் எப்படி அவருக்கு இன்னும் மவுசு குறையாமல் இருக்கிறதோ அதேபோலத்தான் சினிமாவிலும் இம்மி கூட குறையாமல் இருக்கிறது. அதற்கு சமீபத்தில் டிஜிட்டலில் வெளியிடப்பட்ட அவரது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் தான் சாட்சி…
இதுதான் விஜய் வசந்த் நடிக்கும் ‘என்னமோ நடக்குது’ படத்தை இயக்கிவரும் ராஜபாண்டியையும் வித்தியாசமாக ஏதாவது செய்ய தூண்டியுள்ளது. படத்தின் கதைப்படி 1980களில் நடப்பதாக வரும் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் இளையதிலகம் பிரபுவும் வின்செண்ட் அசோகனும் குத்துச்சண்டை போடுவதாக காட்சி உண்டு.
இதில் ராஜபாண்டி என்ன செய்தார் என்றால் குத்துச்சண்டையில் ஆர்வமுள்ள எம்.ஜி.ஆர் இந்த சண்டைப் போட்டியை பார்வையாளராக உட்கார்ந்து ரசிப்பது போல கிராஃபிக்ஸில் உருவாக்கியுள்ளாராம். இதுவும் தவிர ‘வா இது நெத்தியடி’ என்ற பாடலும் எம்.ஜி.ஆருக்கு இருக்கிறதாம். இந்தப்பாடலை கங்கை அமரன் தான் எழுதியிருக்கிறார். நிச்சயமா என்னமோ நடக்குதுப்பா..!::.
Comments
Post a Comment