லட்சுமி மேனனுடன் என்னை இணைத்து பேசினால் அவ்வளவுதான் : விஷால் மிரட்டல்!!!

15th of March 2014
சென்னை::நடிகை லட்சுமி மேனனுக்கும், விஷாலுக்கும் இடையே காதல் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இதை பகிரங்கமாகவே நடிகர் விஷ்னு, அனைவருக்கும் முன்பு விஷாலிடம் கேட்டார்.

விஷால், லட்சுமி மேனன் நடித்துள்ள 'நான் சிகப்பு மனிதம்' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாலா, சமுத்திரக்கனி, விஜய், சுசீந்திரன், ஹரி, நடிகர்கள் விஷ்னு, சாந்தனு, அருண் விஜய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஷ்னு, "நடிகை லட்சுமி மேனனை விஷால், ரொம்பவே பாதுகாக்கிறார். ஏன் எப்படி அவரை பாதுக்காக வேண்டும். விஷாலுக்கும், நடிகை லட்சுமி மேனனுக்கும் என்ன சம்மந்தம் என்பதை, இந்த மேடையில் விஷால் தெளிவுப்படுத்த வேண்டும்." என்று பேசினார்.

அதற்கு பதிலளித்த விஷால், "லட்சுமி மேனனுக்கும் தனக்கும் இடையில் இருப்பது வெறும் நட்புதான். இந்த படத்திற்கு நானோ, இயக்குநரோ எவ்வளவு உழைத்திருக்கிறோமோ, அதைவிட மேலாக லட்சுமி மேனன், ஒரு நடிகையாக உழைத்திருக்கிறார். என்களின் நிலை என்ன என்பதை, நான் அவன் இவன் படத்தில் பெண்ணாக நடித்ததன் மூலம் உணர்ந்தேன். அந்த வகையில் லட்சுமி மேனம் மட்டும் அல்ல மற்ற அனைத்து நடிகைகளின் மீது எனக்கு பெரும் மதிப்பு உண்டு. அந்த வகையில் ஒரு நடிகையாக லட்சுமி மேனன், தனது வயதுக்கு தாண்டிய பக்குவத்தோடு இப்படத்தில் நடித்துக்கொடுத்தார். இனி, லட்சுமி மேனனைப் பற்றியோ, என்னைப் பற்றியோ பேசினால், கிரிக்கெட் பேட்டால் தான் பேசுவேன்." என்று விஷ்னுவை செல்லமாக மிரட்டினார்.

 

Comments