25th of March 2014
சென்னை::.2011ல் வெளியான ‘எங்கேயும் காதல்’ படத்திற்கு பின் மீண்டும் இணைந்திருக்கிறது ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடி.. இது ‘ரோமியோ-ஜூலியட்’ படத்திற்காக.. இந்தப்படத்தை லட்சுமண் என்பவர் இயக்குகிறார். இவர்தான் எஸ்.ஜே.சூர்யா, நயன்தார நடித்த ‘கள்வனின் காதலி’ படத்தை தயாரித்தவர். இப்போது இயக்குனராக அவதாரம் எடுத்துவிட்டார்.
இந்தப்படத்திற்காக ஜெயம் ரவியையும் ஹன்சிகாவையும் வைத்து போட்டோஷூட்டெல்லாம் நடத்திவிட்டார் லட்சுமண். தற்போது ஜெயம் ரவி அவரது அண்ணன் இயக்கும் படத்தில் பிஸியாக இருக்கிறார். அதை முடித்துவிட்டு வந்ததும் இந்தப்படத்தை ஆரம்பிக்க இருக்கிறார்கள். இதிகாச கதையான ரோமியோ-ஜூலியட் போல சீரியஸாக இல்லாமல் காமெடியும் காதலும் கலந்த படமாக இது இருக்குமாம்.

Comments
Post a Comment