சந்தானத்துடன் இணையும் சோலார் ஸ்டார் ராஜகுமாரன்!!!

21st of March 2014
சென்னை::.சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன் மீண்டும் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்குப் பிறகு காமெடி நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்தப் படததில் சாதனத்திற்கு ஜோடியாக புதுமுகம் அஷ்னா சவேரி நடிக்கிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானம்-பவர் ஸ்டார் கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க் அவுட் ஆனது. அதனால் படமும் ஹிட் ஆனது.

அதே மாதிரி இந்தப் படத்தில் ஒரு அம்சத்தை சேர்த்திருக்கிறார். ஆனால் இதில் பவர் ஸ்டாருக்கு பதில் சந்தானத்துடன் இணைந்து தேவயானியின் கணவர் சோலார் ஸ்டார் ராஜகுமாரன் நடித்திருக்கிறார். இதுவரை சந்தானம்தான் ஹீரோக்களை ‘கலாய்த்து’ காமெடி செய்திருப்பதை பார்த்திருப்போம். முதன் முறையாக இந்த படத்தில் சந்தானத்தையே கலாய்க்கும் நடிகராக ராஜகுமாரன் நடித்திருக்கிறாராம்.

“காரம் சாப்பிட்டு கண்ணுல தண்ணி வந்து பாத்திருப்ப, கலாய்ச்சுக் கலாய்ச்சே கண்ணுல தண்ணி வந்து பாத்திருக்கியான்னு” ராஜகுமாரன் பேசற ‘பன்ச்’ வசனங்கள்லாம் படத்துல பட்டையக் கிளப்புற மாதிரி இருக்காம். இந்தப் படத்தை ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘ஈரம்’, ‘வேட்டைக்காரன்’ உட்பட பல படங்களில் நடித்தவரும், ‘முத்திரை’ படத்தை இயக்கியவருமான ஸ்ரீநாத் இயக்குகிறார்.

Comments