14th of March 2014
சென்னை::கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் கலக்கல் கூட்டணியான சந்தானம், சேது, அதே படத்தில் இவருடன் ஜோடி போட்ட விஷாகா என மூன்றுபேரும் மீண்டும் இணைந்திருக்கும் படம் தான் ‘வாலிப ராஜா’. சமீபத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பின்போது சுவராஸ்யமான நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
இந்திப்படங்களில் வருவது போன்று ஒரு குடும்பவிழா காட்சி ஒன்றை படமாக்கினார்கள். அந்தக்காட்சியில் படத்தின் கதாநாயகி விஷாகா உட்பட உடன் நடித்த நடிகர்கள் குலோப் ஜாமூன் சாப்பிடுவது போன்ற காட்சிகளை படமாக்கினார்கள்.
காட்சிப்படி குலோப் ஜாமூனை வாயில் வைப்பது போல நடித்தால் போதுமாம். ஆனால் இதை உணராத நம்ம விஷாகாவோ ஒவ்வொரு ரீடேக்கின்போதும் என கிட்டத்தட்ட 10 குலோப் ஜாமூன்களை தின்றுவிட்டாராம். பார்த்தார்கள் உதவி இயக்குனர்கள்.. இனி விட்டால் உள்ளதும் தீர்ந்துவிடும்.. அடுத்தடுத்த காட்சிகளுக்கு ஸ்வீட் இருக்காது என மீதியை எடுத்து ஒளித்து வைத்து பயன்படுத்தினார்களாம்.
இதை சொன்னது வேறு யாருமல்ல.. நம்ம விஷாகாவே தான்.
Comments
Post a Comment