ஹைய்யா சொல்லிட்டாங்க… : விஜய் புதுப்பட டைட்டில் ‘கத்தி’யாம்!!!!

26th of March 2014
சென்னை::சமீபகாலமாக படம் எடுத்து முடித்த பிறகும் கூட படத்தின் டைட்டிலை சொல்வதில் டைரக்டர்கள் திணறி வருகிறார்கள். அதிலும் அஜித், விஜய் படங்களின் டைட்டிலெல்லாம் ரிலீசாகும் வரை வெளியில் தெரிவதேயில்லை.
இப்படித்தான் டைட்டிலே வைக்காமல் சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்துக்கு கத்தி என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
ஐங்கரன் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்துக்கு முதலில் ‘வாள்’, ‘அடிதடி’, ‘தீரன்’  என்று பட டைட்டில்களை யோசித்தார் டைரக்டர் முருகதாஸ். ஆனால், இப்போது படத்தின் டைட்டில் ‘கத்தி’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கத்தி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் நான்கைந்து மாதங்களில் படத்தை முடித்துவிட்டால் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்து விடலாம் என்கிற திட்டத்தில் இருக்கிறது தயாரிப்பு நிறுவனம். விஜய்க்கு அதுதான் ஆசையாம். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
அப்போ இந்த தீபாவளிக்கும் செம போட்டி இருக்கும் போல..!   

Comments