12th of March 2014
சென்னை::வருடத்துக்கு இரண்டு முதல் மூன்று படங்கள் வரை நடித்து வந்தவர் சிம்பு.
ஆனால், ஒஸ்தி, போடா போடி படங்களுக்குப்பிறகு அவர் கமிட்டான வாலு,
வேட்டைமன்னன் படங்களில் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். அதன்காரணமாக,
2012க்கு பிறகு சிம்பு நாயகனாக நடித்த படம் எதுவும் திரைக்கு வரவில்லை.
மாறாக, அவர் கெஸ்ட் ரோலில் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா, இங்க என்ன
சொல்லுது என்ற இரண்டு படங்கள் திரைக்கு வந்து சிம்புவை ரசிகர்களுக்கு
ஞாபகப்படுத்தி விட்டு சென்றன.
இந்த காலதாமதத்திற்கு, ஹன்சிகாவுடன் சிம்பு காதல் கடலை போட்டு வந்ததும் ஒரு முக்கிய காரணமாக கூட இருக்கலாம். இதனால் சிம்புவின் ரசிகர்கள் ரொம்ப சலித்துக்கொண்டனர். அதனால்தானோ என்னவோ, கேரியருக்கு முன்பு காதல் ஒரு பொருட்டே இல்லை என்று நினைத்து விட்ட சிம்பு ஹன்சிகாவை தூக்கி எறிந்துவிடடார்.
மேலும், தனது பயணத்தில் ஏற்பட்ட இடைவெளியை குறைத்து விட வேண்டும் என்று இப்போது தான் நடித்து வரும் படங்களில் பிசியாக இறங்கியிருக்கிறார் சிம்பு. வாலு படத்தை முடித்து விட்டவர், இது நம்ம ஆளு, சட்டென்று மாறுது வானிலை என பிசியாகி விட்டார். அந்த வகையில், இந்த ஆண்டில் தனது நடிப்பில் இரண்டு படங்களையாவது வெளியிட்டு விட வேண்டும் என்று தற்போது முழுவீச்சில் இறங்கியிருக்கிறார் சிம்பு.

Comments
Post a Comment