31st of March 2014
சென்னை::ரஜினியைப் பொருத்தவரை மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பதே ரொம்ப ரொம்ப அரிது.
சென்னை::ரஜினியைப் பொருத்தவரை மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பதே ரொம்ப ரொம்ப அரிது.
அப்படிப்பட்டவரை சில தினங்களுக்கு முன்பு ‘கோச்சடையான்’ படத்துக்காக ஒரு ஸ்பெஷல் பேட்டி எடுத்தது ஜெயா டிவி. இந்த சிறப்பு நிகழ்ச்சி வருகிற தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.
ரஜினி என்றால் அவரை பேட்டி எடுப்பவரும் பிரபலமாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்த ஜெயாடிவி நிர்வாகம் நகைச்சுவை நடிகர் விவேக்கை தொடர்பு கொண்டது. அவரும் மகிழ்ச்சியோடு ஓ.கே சொல்லி விட்டார்.
இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது; மிகவும் சீக்ரெட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்தது ஜெயாடிவி. ஆனால் ரஜினி அபீஸுக்குள் நுழைந்தது முதல் அவர் பேட்டி கொடுத்து விட்டு, அங்குள்ள ஊழியர்களின் பிடியில் இருந்து தப்பித்து வந்தது வரையிலான எல்லா விஷயங்களும் உடனுக்குடன் லீக்காகி மீடியாக்களில் செய்தியாகி விட்டது.
விசாரித்துப் பார்த்ததில் விவேக் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்த அவரது மேனேஜர் ஆர்வக்கோளாரில் அவரது செல்போனில் அதை படம் பிடித்து ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து விட்டார்.விஷயத்தைக் கேள்விப்பட்ட போது ஜெயா டிவியை விட ரொம்பவே அப்செட்டாகி விட்டாராம் ரஜினி..
Comments
Post a Comment