7th of March 2014..
சென்னை::புதுயுகம் தொலைக்காட்சி வித்தியாசமான புத்துப்புது நிகழ்ச்சிகளை தயாரித்துவருகிறது. அந்தவகையில் நடிகை சங்கீதா தொகுத்து வழங்கும் ‘நட்சத்திர ஜன்னல்’ நிகழ்ச்சி, சினிமா பிரபலங்கள் இளைப்பாறும் பொழுதுபோக்குத் தளமாக மாறி வருகிறது. ஒவ்வொரு வாரமும் சங்கீதாவுடன் சினிமா நட்சத்திரங்கள் உரையாடும் இந்த நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
தொலைக்காட்சிகளில் தலைகாட்ட விரும்பாத பல பிரபலங்கள் கூட இந்த நிகழ்ச்சிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷாலிட்டியே கலந்துகொள்ளும் விருந்தினர்கள் அரங்கில் நடிகை சங்கீதாவிடம் உரையாடும்போது தங்கள் செல்ஃபோனை அணைக்காமல் வைத்திருக்க வேண்டும் என்பதும், நிகழ்ச்சியின்போது அவருக்கு வரும் அழைப்புகளை அப்படியே எடுத்து பேசவேண்டும் என்பதும் தான். அப்படி வரும் அழைப்புகளை அவர்கள் பேசும்போது நிகழ்ச்சி மேலும் சுவாரஸ்யம் அடைகிறது.
அந்த வரிசையில் சிறப்பம்சமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கு பெறாத நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளிப்படையான பல தகவல்களை பேசியிருக்கிறார். ஹன்சிகாவுடனான காதல் முடிவுக்கு வந்துள்ள சூழலில், இதில் பங்கெடுத்திருப்பது பல எதிர்ப்பார்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிகழ்ச்சி வரும் ஞாயிறு மாலை 7மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது...

Comments
Post a Comment