11th of March 2014
சென்னை::நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று முன் தினம் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஷாருக்கான் கலந்து கொண்டார். விழா முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு இயக்குனர் செளந்தர்ய ரஜினிகாந்த் பேட்டியளித்தார். ஆனால் ரஜினியின் நெருங்கிய நண்பரும் நடிகருமான கமல் ஹாசன் விழாவிற்கு வரவில்லை.
இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது ரஜினியின் மகள் சௌந்தர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதில், மும்பையிலேர்ந்து நட்சத்திரங்களை இந்த பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரவழைச்சிருந்தீங்க. ஆனால் உங்கள் அப்பாவின் நண்பரான கமல் சார் வரலையே? என்ற கேள்விக்கு கமல் சார் வரணும்னு நான் ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால் அவர் ‘உத்தமவில்லன்’ படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை என்றார்.
தொடர்ந்து, கோச்சடையான் விளம்பரங்களில் வைரமுத்துவின் பெயருக்கு பிறகு வாலி பெயர் வந்திருக்கே? இந்த கேள்விக்கு சௌந்தர்யாவின் பதில் இதோ, படத்தில் ஒரே ஒரு பாடல்தான் வாலி சார் எழுதியிருக்கார். மற்ற எல்லா பாடல்களும் வைரமுத்து சார்தான் எழுதியிருக்கார். அதனால்தான் அவர் பெயரை பின்னால் போட வேண்டியதாகிவிட்டது என்று கூறினார். உடனே அவரிடம் வாலி சீனியராச்சே? என கேள்வி எழ திரும்பவும் அதே பதிலை ரிப்பீட் செய்தார். மேலும் இதில் வாலியை சிறுமைப்படுத்தும் எண்ணம் சிறிதும் எங்களுக்கு இல்லை என்றும் கூறினார்..
Comments
Post a Comment