ரசிகர்களை சந்திப்பது எப்போது? : ரஜினிகாந்த் பரபரப்பு தகவல்!!!

10th of March 2014
சென்னை::கோச்சடையான் பட வெற்றி விழாவில், ரசிகர்களை நேரில் சந்திப்பேன்,'' என, நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், அவரின் இந்த பேச்சு,

பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. ரஜினிகாந்த் - தீபிகா படுகோனே நடிப்பில், "கோச்சடையான்' படத்தை, ரஜினியின் மகள் சவுந்தர்யா அஸ்வின் இயக்கி உள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. "மோசன் கேப்சர்' இதில், ரஜினி பேசியதாவது: ரசிகர்களின் ரசனை மாறி வருகிறது. "இப்போது, ராஜா, ராணி கதையை ஏற்றுக் கொள்வார்களா, ரசிகர்கள் ஏற்கும் வகையில், புதுவிதமாக எப்படி படத்தை எடுப்பது' என யோசித்தோம்.
 
அப்போது, என் மகள் சவுந்தர்யா, "மோசன் கேப்சர்' என்ற நவீன தொழில்நுட்ப முறையில், படத்தை தயாரிக்கலாம்' என, கூறினார். "கடின உழைப்பு; அதிகமான பொருட்செலவு ஏற்படுமே, சமாளிக்க முடியுமா; நினைத்து போல், படத்தை எடுக்க முடியுமா' என, அவரிடம் கேட்டேன்.
"கண்டிப்பாக என்னால் முடியும்; படத்தை நானே இயக்குகிறேன்' என, சவுந்தர்யா, மிகவும் ஆர்வம் காட்டினார். அதன்படி, மிகப் பெரிய பொருட்செலவில், உலகத் தரத்தில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் வெற்றி விழாவில், ரசிகர்களை நேரில் சந்திப்பேன்.
இவ்வாறு, ரஜினிகாந்த் பேசினார்.

உற்சாகம் : லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்களை சந்திக்கப் போவதாக, ரஜினி அறிவித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியை, அரசியலில் குதிக்கும்படி, நீண்ட நாட்களாக வற்புறுத்தி வரும் அவரின் ரசிகர்களும், இந்த அறிவிப்பால், உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால், படம் வெளிவந்து, அதற்குப் பின் வெற்றி விழா நடக்கும் முன், தேர்தல் முடிந்து, மத்தியில் புதிய ஆட்சி வந்து விடும் என்று, பலரும் கருத்து தெரிவித்தனர்....

 

Comments