ஐம்பது நாட்களைத் தொட்ட ஜில்லா, வீரம்!!!

2nd of March 2014
சென்னை::தல நடித்த வீரமும், தளபதி நடித்த ஜில்லாவும் 50 நாட்கள் ஓடி அரைசதம் அடித்துள்ளது. அஜீத், தமன்னா, விதார்த், பாலா, சந்தானம் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த படம் வீரம். சிறுத்தை சிவா டைரக்டர். பாட்டு, பைட்டு, தலயின் வில்லேஜ் கெட்டப்பு, சால்ட் அண்ட் பெப்பர் லுக்குன்னு தல ரசிகர்களும், பொது ரசிகர்களும் தலப்பொங்கலை கொண்டாடினார்கள். "நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க... என்னை கெட்டவன்னு சொல்வாங்க திட்டிடாதீங்க..."ன்னு இன்னும் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது 50வது நாளுக்கு வந்துவிட்டது வீரம்.

சென்னையில் சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி, சாந்தி, அபிராமி, மாயாஜால் ஆகிய மால் தியேட்டர்களில் தல இன்னும் வேட்டிய மடிச்சுக்கட்டியபடி நடைபோட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 100 தியேட்டர்களில் வீரம் வெற்றி நடைபோடுவதாக விநியோகஸ்தர்கள் ஏரியா தகவல்கள் தெரிவிக்கிறது.

இளைய தளபதி விஜய்யும், கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இணைந்து நடித்த ஜில்லாவை ஆர்.டி.நேசன் டைரக்ட் செய்திருந்தார். காஜல் அகர்வால் ஹீரோயின். பொங்கலையொட்டி வெளியான ஜில்லா 50வது நாளுக்கு வந்துவிட்டது. சத்யம், ஸ்கேப், தேவி, அபிராமி, சங்கம், ஆல்பட், பெரம்பூர் எஸ் 2, பிவிஆர், உதயம், கமலா, வளாகங்களில் ஜில்லா கொடி இன்னும் பறக்கிறது. தமிழ்நாட்டில் 60 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments