19th of March 2014
உலகளவில் புகழ் பெற்ற சினிமா இணையத்தளமான 'டேஸ்ட் ஆஃப் சினிமா' என்ற இணையதளம் உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஒன்பதாவது இடத்தைப் பெற்று தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே பெருமை வாங்கி தந்துள்ளார் இளையராஜா.
இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே. சிறந்த இசைக்கோர்ப்பு, இன்ஸ்ட்ருமென்டலிஸ்ட், இசை ஒருங்கிணைப்பு, பாடகர், பாடல் ஆசிரியர் ஆகிய பிரிவில் இளையராஜா சிறப்பான பணியை வழங்கியிருப்பதாக ‘டேஸ்ட் ஆஃப் சினிமா’ இணைய தளம் பாராட்டியுள்ளது.
இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் 4500-க்கும் மேற்பட்ட பாடல்கள் கொடுத்து, 950-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து, ஏராளமான சர்வதேச மேடை நிகழ்ச்சிகள் நடத்தியவர் இளையராஜா.
சென்னை::உலகின் மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்களில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார் இசைஞானி இளையராஜா.
உலகளவில் புகழ் பெற்ற சினிமா இணையத்தளமான 'டேஸ்ட் ஆஃப் சினிமா' என்ற இணையதளம் உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஒன்பதாவது இடத்தைப் பெற்று தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே பெருமை வாங்கி தந்துள்ளார் இளையராஜா.
இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே. சிறந்த இசைக்கோர்ப்பு, இன்ஸ்ட்ருமென்டலிஸ்ட், இசை ஒருங்கிணைப்பு, பாடகர், பாடல் ஆசிரியர் ஆகிய பிரிவில் இளையராஜா சிறப்பான பணியை வழங்கியிருப்பதாக ‘டேஸ்ட் ஆஃப் சினிமா’ இணைய தளம் பாராட்டியுள்ளது.
இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் 4500-க்கும் மேற்பட்ட பாடல்கள் கொடுத்து, 950-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து, ஏராளமான சர்வதேச மேடை நிகழ்ச்சிகள் நடத்தியவர் இளையராஜா.
Comments
Post a Comment