12th of March 2014
சென்னை::மனசின் மகிழ்ச்சி முகத்திலும் செயலிலும் எதிரொலிக்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணம்.விளைவு... இப்போது நிற்க நேரம் இல்லாத அளவுக்கு தமிழ், தெலுங்கில் புதுப்புது வாய்ப்புகள். இதுவரை 9 புதிய படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வரும் ஹன்சிகாவுக்கு இந்த ஆண்டு மட்டுமே நான்கு படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாம்.
மான்கராத்தே, வாலு அடுத்தடுத்து வெளியாக உள்ளன. சுந்தர் சியின் அரண்மனை, ஜெயப்பிரதாவின் உறவினர் சித்தார்த்துடன் உயிரே உயிரே, ஆர்யாவுடன் மீகாமன், விக்ரமுடன் பெயரிடப்படாத ஒரு படம் என தொடர்கிறது அவர் தமிழ்ப் படப் பட்டியல்.தெலுங்கில் இரண்டு பெரிய படங்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இரண்டிலுமே சோலோ ஹீரோயின் வேடம்.தொழிலில் அசுர வேக வளர்ச்சி, தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கலும் தீர்ந்துபோன நிம்மதி போன்றவற்றால்.. தன் நடிப்பை மேலும் மெருகேற்றிக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக சமீபத்தில் தன் சக நடிகையிடம் பகிர்ந்து கொண்டாராம் ஹன்சி. ..
Comments
Post a Comment