26th of March 2014
சென்னை::தியேட்டரிலேயே இல்லாத ‘ஜில்லா’ படத்துக்கு அந்தப்படத்தின் தயாரிப்பாளர் 75-வது நாள் போஸ்டர் ஒட்டியது சினிமா ரசிகர்களிடையே கடும் எரிச்சலைக் கிளப்பியிருக்கிறது.
சமீபகாலமாக தமிழ்சினிமாவில் தயாராகும் பட எண்ணிக்கைத்தான் அதிகமாகி வருகிறதே தவிர, ரிலீசாகும் படங்களில் 10 படங்கள் கூட ஹிட் லிஸ்ட்டில் வருவதில்லை. இதை எல்லா மேடைகளிலும் சொல்லிக் கவலைப்படம் தியேட்டர் உரிமையாளர்கள் நிலைமை இப்படியே போனால் ஒரு கட்டத்தில் தமிழகத்தில் உள்ள எல்லா தியேட்டர்களையும் மூடக்கூடிய அபாயம் ஏற்படும் என்றும் அவர்கள் தயாரிப்பாளர்களை எச்சரித்து வருகின்றனர்.
நிஜம் இப்படியிக்க, பெரிய பெரிய ஹீரோக்கள் நடித்த படங்களுக்கே பொய்யாக போஸ்டர் ஒட்டி அந்தப்படத்தை வெற்றிப்படமாக காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள்.
விஜய் நடித்த ‘ஜில்லா’ படம் இந்த வருடம் பொங்கலுக்கு ரிலீசானது. அந்தப்படத்துக்கு நேற்று சென்னை நகரம் முழுவதும் 6 சீட் அளவு கொண்ட பெரிய சைஸ் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. வெற்றிகரமான 75-வது நாள் என்றும், இது ரசிகர்களின் வெற்றி என்றும் வாசகங்களோடு ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டரில் சென்னை ஆல்பட் மற்றும் பி.வி.ஆர் தியேட்டர்களில் ஜில்லா படம் ஓடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் விசாரித்ததில் ஆல்பட் தியேட்டரில் மட்டும் தான் ஜில்லா படம் ஓடுவதாகவும், அதுவும் பெரிய தியேட்டரில் இல்லை. சிறிய தியேட்டரான பேபி ஆல்பட் தியேட்டரில் 2 காட்சிகள் மட்டும் ஓடுவதாகவும் அதன் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பி.வி.ஆர் தியேட்டரின் இணையதளத்தைப் பார்த்த போது டிக்கெட் புக் செய்யும் படங்கள் லிஸ்ட்டில் ஜில்லா படம் இடம்பெறவே இல்லை.
தயாரிப்பாளர்களின் இந்த பொய்யான பப்ளிசிட்டியால் ரசிகர்கள் தான் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ‘ஜில்லா’ மட்டுமல்ல சமீபகாலமாக ரிலீசாகும் எந்தப்படமாக இருந்தாலும் பேப்பர்களின் விளம்பரங்களைப் பார்த்து போக முடிவதில்லை. பட விளம்பரத்தில் அவர்கள் குறிப்பிடும் பெரும்பாலான தியேட்டர்களில் படம் ரிலீசாவதே இல்லை.
சம்பந்தப்பட்ட தியேட்டருக்கு நேரில் சென்று விசாரித்தால் தான் எந்தெந்த படங்கள் ரிலீசாகியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று வேதனையோடு தெரிவித்தார் தமிழ்சினிமாவின் ஒரு தீவிர ரசிகர்.
இந்த ரசிகரைப் போல எத்தனை விஜய் ரசிகர்கள் பி.வி.ஆர் தியேட்டருக்கு ஆசையோடு ஜில்லா படம் பார்க்கப் போய் ஏமாந்தார்களோ..? விஜய்க்கே வெளிச்சம்.

Comments
Post a Comment