3rd of March 2014
சென்னை::ஒரு படம் வெற்றிபெற்றால் அந்தபடத்தின் கூட்டணி அடுத்த படத்திலும் இணைவது வாடிக்கையான ஒன்றுதான். அந்த அடிப்படையில்தான் சிவகார்த்திகேயன், இயக்குனர் துரை செந்தில்குமார், அனிருத், என ‘எதிர்நீச்சல்’ படத்தின் டீம் அப்படியே அடுத்த படமான ‘டானா’விலும் இணைந்திருக்கிறது.
கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, கும்கி படத்தின் ஒளிப்பதிவாளரான சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் வசனத்தை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதுகிறார். ‘டாணா’ என்றால் போலீஸ் என்று அர்த்தமாம். வெள்ளைக்காரன் ஆட்சி செய்த காலத்தில் போலீஸாரை அப்படித்தான் அழைப்பார்களாம். இதில் சிவகார்த்திகேயன் தான் ‘டாணா’க்காரர்.
தற்போது ‘மான் கராத்தே’ படத்தில் நடித்து முடித்துவிட்ட சிவகார்த்திகேயன் ‘டாணா’வுக்கு தயாராகிவிட்டார். வரும் மார்ச்-6ஆம் தேதி படப்பிடிப்பை சென்னையில் துவங்க இருக்கிறார்கள். அனேகமாக படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மார்ச்-20ஆம் தேதி வரை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.
Comments
Post a Comment