19th of March 2014
சென்னை::சிலந்தி' படத்தில் வில்லன் வேடத்த சந்துரு, தனது பெயரை ராஜஷந்ரு என்று மாற்றிக்கொண்டிருப்பதுடன், 'மது மாது சூது' என்ற படத்தை தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படத்தின் கதாநாயகிகளாக பெங்களூரை சேர்ந்த மாடல் சந்தனா மற்றும் சென்னை சேர்ந்த விக்னேஷா அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் ஏராளமான புதுமுக நடிகை, நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் குறித்து கூறிய ராஜஷந்ரு, "போதைக்கு அடிமையான ஒரு இளைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது. 2014 புத்தாண்டு பிறக்கும் அந்த ராத்திரியில் ஒரு ஹைடெக்கான பாரில், அந்த இளைஞன் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பை வைத்து இப்படத்தின் திரைக்கதையை பரபரப்பாக அமைத்துள்ளோம்.
திருப்பூரில் உள்ள ஒரு பாரை வாடகைக்கு எடுத்து அதன் உள்கட்டமைப்பை, ரூ.50 லட்சம் செலவில் மாற்றி அமைத்து, 40 நாட்களில் ஒரே கட்டமாக படபிடிப்பை நடத்தி முடித்துள்ளோம்." என்றார்.
இப்படத்தின் மூலம் ஸ்ரீனி என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் 200க்கும் மேற்பட்ட விளம்பர படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபல ஒளிபதிவாளர் மதியின் உதவியாளர் லி & எம்.எம்.எஸ்.சங்கர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். கே.ஆனந்தி என்ற திரைப்படக் கல்லூரி மாணவி படத்தொகுப்பாளராக அறிமுகமாகிறார். சண்டைப் பயிற்சியை நாக் அவுட் நந்தா அமைத்துள்ளார்.
மே மாதம் வெளியிட தயாராக உள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விரைவாக நடந்துக் கொண்டிருக்கிறது.

Comments
Post a Comment