கவுண்டரின் ’49-ஓ’ சிங்கிள் ட்ராக் – இன்று ரேடியோ மிர்ச்சியில் கேட்கலாம்!!!!!!

31st of March 2014
சென்னை::காமெடியன் கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள படம் 49 ஓ. இப்படத்தில் விவசாயியாக அவர் நடித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தை களமாகக்கொண்டு உருவாகும் அப்படத்தில் விவசாயிகளுக்கு நிறைய அறிவுரைகளை அள்ளி விடுகிறாராம் கவுண்டர். கூடவே வயல்காட்டில் விவசாயிகள் செய்யும் அத்தனை வேலைகளையும் தானும் செய்து நடித்திருக்கிறார்.
 
அதோடு, சிரிப்பு நடிகர் என்றாலும் சீரியசான இந்த கதைக்களத்திற்கேற்ப மாறியுள்ள அவர், மழை மனிதனின் வாழ்க்கைக்கு எத்தனை இன்றியமையாதது என்பதை உணர்த்தும் வகையில் ஒரு பாடலும் பாடி நடித்திருக்கிறார். இந்த பாடல் படத்திற்கு பெரிய ப்ளசாக அமைந்துளளதாம்.
 
அதாவது, அம்மா போல அள்ளித்தரும் மழைதான், அவ ஆதாரமா நின்னா இல்லை குறைதான் - என்ற தொடங்கும் அந்த பாடலில் உருக்கமாக நடித்திருக்கிறாராம் கவுண்டமணி. அதைப்பார்க்கும் அத்தனை விவசாயிகளின் கண்களிலும் ஈரம் கசிந்து விடுமாம். மேலும் இந்த பாடல் காரணமாக படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கும் என்றுகூட எதிர்பார்க்கிறார்களாம்.

உலகத்தின் மூலைமுடுக்கில் இருக்கும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது இரண்டு படங்கள்.. ஒன்று நம்ம சூப்பர்ஸ்டாரின் கோச்சடையான்.. இன்னொரு படம் ’49-ஓ’. பின்னே… ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் நம் கவுண்டமணி கதைநாயகனாக(வும்) களம் இறங்கியிருக்கும் படம் இல்லையா.?

இந்தப்படத்தில் யுகபாரதி எழுதி, ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்’ புகழ் ஜெயமூர்த்தி பாடிய “அம்மா போல அள்ளித்தரும் மழைதான்.. அவ ஆதாரமா நின்னா இல்லை குறைதான்..” என ஒரு பாடல் படத்தில் இடம்பெற்றுள்ளது.

படத்தில் மழை வரம் வேண்டி கவுண்டமணி பாடுவதாக அமைந்த இந்தப்பாடலின் சிங்கிள் ட்ராக்கை இன்று ரேடியோ மிர்ச்சி எஃப்.எம்மில் கேட்டு ரசிக்கலாம். படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது...

Comments