14th of March 2014
சென்னை::தேர்தல் ஜுரம் எல்லோரையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. அது கவர்ச்சி
நடிகை சோனாவையும் விட்டு வைக்கவில்லை, 40 வயதுக்கு பிறகு அரசியலுக்கு
வருவேன் என்று பயமுறுத்தி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
இந்தியா
ஆணாதிக்க நாடு. இங்கு பெண்கள் பின்தங்கியே இருக்கிறார்கள். அதனால்தான்
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்திருக்கிறது. கற்பழிப்பு சம்பவங்கள்
அதிகரித்திருக்கிறது. அரசியல்வாதிகள் இதுபற்றி பேசிக் கொண்டுதான்
இருக்கிறார்களே தவிர நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதனால் ஆண்களுக்கு
இணையாக பெண்களும் அரசியலுக்கு வரவேண்டும்.
எந்த கட்சியில் பெண்கள்
நின்றாலும் பெண்ணுக்குத்தான் அவர்கள் வாக்களிக்க வேண்டும். பெண்கள்
போட்டியிடாத தொகுதியில் எந்த கட்சி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதோ
அந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது.
நிச்சயமாக அரசியலுக்கு வந்து பெண்களுக்கு சேவை செய்வேன் 40 வயதுக்கு
மேல்தான் (இன்னும் ஆகலையா...?)அரசியலுக்கு வருவேன்.
இவ்வாறு சோனா கூறியுள்ளார்.
சோனாவையும், நமீதாவையும் ஒரே தொகுதியில நிக்க வையுங்க பாலிட்டீசியன்ஸ்..
இவ்வாறு சோனா கூறியுள்ளார்.
சோனாவையும், நமீதாவையும் ஒரே தொகுதியில நிக்க வையுங்க பாலிட்டீசியன்ஸ்..
Comments
Post a Comment