கமலின் 3 படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளிவருவதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!!!

13th of March 2014
சென்னை::கமலின் 3 படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளிவருவதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையப்போகிறது.
கமல் நடித்து, இயக்கியுள்ள ‘விஸ்வரூபம் 2’ படம் முடிந்துள்ளது. ஏற்கனவே வந்த விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக இதை எடுத்துள்ளார். படப்பிடிப்பு பல மாதங்கள் விறுவிறுப்பாக நடந்து நிறைவடைந்துள்ளது. தற்போது டப்பிங் ரீ-ரிக்கார்டிங், கிராபிக்ஸ் போன்ற இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தற்போது ‘உத்தமவில்லன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜோடியாக 3 நாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. காமெடி திரில்லர் படமாக எடுக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நான்கு மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் படம் திரைக்கு வரும் என தெரிகிறது.
மலையாளத்தில் வெளியான ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக் படவேலைகளை ஆகஸ்டு இறுதியில் துவக்குகின்றனர். ‘திரிஷ்யம்’ மலையாளத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம். இதன் தமிழ் பதிப்பில் கமல் ஜோடியாக நடிக்க மீனா, சிம்ரன், நதியா பெயர்கள் அடிபட்டன. இறுதியில் கவுதமி தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமும் இவ்வருடம் இறுதியில் ரிலீசாகிறது.    

Comments