14th of March 2014
சமீபத்தில் தான் நாற்பது லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான அரங்கத்தில் திரௌபதி சுயம்வரம் நிகழ்ச்சியை பெரும் நட்சத்திர பட்டாளங்களை வைத்து இயக்குனர் செங்கோட்டை சி.வி.சசிகுமார் இயக்கத்தில் நான்கு கேமராக்கள் கொண்டு ஒளிப்பதிவாளர் கணேஷ்குமார் படமாக்கினார்.
வரும் வாரங்களில் ஒளிபரப்பாகவிருக்கும் திரௌபதி சுயம்வரம் மற்றும் அதை தொடர்ந்து பாண்டவர்கள் ஐவருடனான திருமணம், மற்றும் திரௌபதியின் முற்பிறப்பு அதை தொடர்ந்து ஐவரை மணந்து கொள்ளும் திரௌபதியின் திருமணத்தில் மறைந்திருக்கும் ரகசியங்கள், சூட்சுமங்கள் முதலியவற்றை வியாசர் பெருமான் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பகவான் தத்துவார்த்தமான ஆதரங்களுடன் விளக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு சுவையாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும்.
சென்னை::அனைவருக்கும் தெரிந்த கதைதான் என்றாலும் பிரமாண்டமான அரங்கங்களும் அவ்வப்போது புது விஷயங்களை கலந்து கதை சொல்வதாலும் மற்றும் பரிச்சயமான தமிழ் நடிகர், நடிகைகள் நடித்திருப்பதாலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது சன் டிவியில் ‘மகாபாரதம்’ தொடர்.
சன் தொலைக்காட்சியில் ஞாயிறு காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகி வரும் மகாபாரதம் தொடர் முதலாம் ஆண்டை முடித்து விட்டு ரசிகர்களில் ஏகோபித்த ஆதரவோடு வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
சமீபத்தில் தான் நாற்பது லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான அரங்கத்தில் திரௌபதி சுயம்வரம் நிகழ்ச்சியை பெரும் நட்சத்திர பட்டாளங்களை வைத்து இயக்குனர் செங்கோட்டை சி.வி.சசிகுமார் இயக்கத்தில் நான்கு கேமராக்கள் கொண்டு ஒளிப்பதிவாளர் கணேஷ்குமார் படமாக்கினார்.
வரும் வாரங்களில் ஒளிபரப்பாகவிருக்கும் திரௌபதி சுயம்வரம் மற்றும் அதை தொடர்ந்து பாண்டவர்கள் ஐவருடனான திருமணம், மற்றும் திரௌபதியின் முற்பிறப்பு அதை தொடர்ந்து ஐவரை மணந்து கொள்ளும் திரௌபதியின் திருமணத்தில் மறைந்திருக்கும் ரகசியங்கள், சூட்சுமங்கள் முதலியவற்றை வியாசர் பெருமான் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பகவான் தத்துவார்த்தமான ஆதரங்களுடன் விளக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு சுவையாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும்.
Comments
Post a Comment