14th of March 2014
இந்நிலையில் வாயைமூடி பேசவும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் நஸ்ரியாவும் பங்கேற்றார். அப்போது திருமணம் பற்றி அவரது தாயாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது, எங்களது குடும்பமும், பஹத்தின் குடும்பமும் நெருங்கிய நண்பர்கள். இவர்களது இருவரது திருமணமும் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி கேரள மாநிலம் அல்சாஜ் எனும் இடத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து திருமண வரவேற்பு ஆகஸ்ட் 24ம் தேதி ஆலப்புழாவில் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா நடிப்பாரா என்பது அவருக்கு தான் தெரியும். ஒருவேளை பஹத்பாசில் நடிக்க சம்மதித்தால், திருமணத்திற்கு பிறகும் நஸ்ரியா நடிப்பார் என்றார்..
சென்னை::சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே பிரபலமானவர் நடிகை நஸ்ரியா நசீம்.
மலையாளத்து வரவான இவர், ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில்
ராஜா ராணி, நய்யாண்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் நய்யாண்டி
படத்தில் நடித்தபோது இவர் ஏற்படுத்திய தொப்புள் பிரச்னை மிகவும் பரபரப்பை
ஏற்படுத்தியது. தற்போது திருமணம் எனும் நிக்காஹ், வாயை மூடி பேசவும் போன்ற
படங்களில் நடித்து முடித்துவிட்டார். இப்படம் விரைவில் திரைக்கு வர
இருக்கிறது. இதற்கிடையே மலையாள நடிகர் பஹத் பாசில் உடன் நஸ்ரியாவுக்கு
திருமணம் நிச்சயமாகியுள்ளது. திருமணம் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் வாயைமூடி பேசவும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் நஸ்ரியாவும் பங்கேற்றார். அப்போது திருமணம் பற்றி அவரது தாயாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது, எங்களது குடும்பமும், பஹத்தின் குடும்பமும் நெருங்கிய நண்பர்கள். இவர்களது இருவரது திருமணமும் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி கேரள மாநிலம் அல்சாஜ் எனும் இடத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து திருமண வரவேற்பு ஆகஸ்ட் 24ம் தேதி ஆலப்புழாவில் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா நடிப்பாரா என்பது அவருக்கு தான் தெரியும். ஒருவேளை பஹத்பாசில் நடிக்க சம்மதித்தால், திருமணத்திற்கு பிறகும் நஸ்ரியா நடிப்பார் என்றார்..
Comments
Post a Comment