பாஸ் என்கிற பாஸ்கரன்-2 பாகத்தில் நயன்தாராவுடன் இணையும் தமன்னா?!!!

21st of  March 2014
சென்னை::.பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது.
இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. இந்தப் படத்தில் ஆர்யா மற்றும் நயன்தாரா நாயகன் நாயகியாக நடித்திருந்தனர். சந்தானம் படத்தின் இரண்டாம் நாயகனாக நடித்திருந்தார்.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது, முதல் பாகத்தை இயக்கிய எம்.ராஜேஷ் இப்படத்தையும் இயக்க, ஆர்யா – நயன்தாராவுடன் இப்படத்தில் தமன்னாவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை நடிகர் ஆர்யாவின் ‘ஷோ பீப்பிள்’ நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர், மற்ற நடிகர், நடிகைகள் யார் யார் ஆகிய விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை. சமீபத்தில் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான அழகுராஜா படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Comments