சிவகார்த்திகேயன் நடிக்கும் மான் கராத்தே படத்தை 18 கோடிக்கு பிசினஸ் செய்த தயாரிப்பாளர்!!!

18th of March 2014
சென்னை::சிவகார்த்திகேயன் நடிக்கும் மான் கராத்தே படத்தின் இசைவெளியீட்டுவிழா சில தினங்களுக்கு முன் நடந்தது. அவ்விழாவுக்கு சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஆட்களை வர வைத்திருந்தனர். விழா நடைபெற்ற சத்யம் தியேட்டரின் உள்ளேயும் வெளியேயும் கூடிய ரசிகர்கள் கூட்டத்தினரால் படத்துறையைச் சேர்ந்த
வி.ஐ.பி.க்களும், மீடியாக்களைச் சேர்ந்தவர்களும் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.
 
அதோடு, பவுன்சர்கள் என்கிற குண்டர்களை வைத்து கெடுபிடி செய்ததும், விழாவுக்கு வந்தவர்களை எரிச்சல் அடைய வைத்தது. இதற்கெல்லாம் யார் காரணம்? மான் கராத்தே படத்தின் தயாரிப்பாளர் மதன்தான் காரணம் என்கிறார்கள்.

சுமார் 8 பட்ஜெட்டில் படத்தை முடித்துவிட்ட மதன், 18 கோடிக்கு வியாபாரம் செய்து 10 கோடி லாபம் பார்த்திருக்கிறாராம். பெரிய தொகைக்கு மான் கராத்தே படத்தை பிசினஸ் செய்துவிட்டாலும், ரிலீஸ் நேரத்தில் பேசிய தொகையைக் கொடுக்காமல் விநியோகஸ்தர்கள் பிரச்னை செய்துவிடக்கூடாது என்ற பயமும் அவருக்கு இருக்கிறதாம்.
 
எனவேதான் மான் கராத்தே இசைவெளியீட்டு விழாவில் ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறார். அதாவது, சிவகார்த்திகேயனுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய கிரேஸ் இருக்கிறது என்பதை மான் கராத்தே படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்குக் காட்டநினைத்தாராம். அதற்காக சி
 
வகார்த்திகேயனின் சொந்த ஊரான திருச்சியிலிருந்து ஆயிரக்கணக்கான ஆட்களை திரட்டிக் கொண்டு வந்து சீன் போட்டிருக்கிறார்.
  

Comments